Published : 28 Dec 2015 10:58 AM
Last Updated : 28 Dec 2015 10:58 AM
நல்லகண்ணு குறித்த கட்டுரை ஓரளவு எம் போன்றோரது எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றது. திரைத் துறையினரிடமிருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டிய காலம் வந்துள்ளது. இரண்டைப் பார்த்தாயிற்று. மூன்றாவது வேண்டாமே.
விஜயகாந்த் சமூக, பொருளாதாரப் பிரசினைகளில் எந்நிலைப்பாடும் இல்லாதவர். 1952-ல் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. காங்கிரஸ் அல்லாத பிற கட்சியினரும், கட்சி சாராதோரும் நில உடைமையாளர்களாக இருந்ததால், அவர்களோடு கூட்டு வைக்க முற்படவில்லை.
ராஜாஜி செய்தார். தனித்து மக்களின் ஆதரவைப் பெற இயலாத நிலையில் இடதுசாரிகள் இருப்பது தமிழ்நாட்டின் துர்பாக்கியமே.
1967 தொடங்கி கூட்டணிகளிலே இருந்ததால் தம் சுய தன்மையைப் பெரிதும் இழக்க நேரிட்டது. ஏன் நேர்மையாளர்களைத் தமிழ் வாக்காளர்கள் புறக்கணிக்கின்றார்கள் என்பது ஆய்வுக்குரியது.
- எஸ்.எஸ்.ஆர்., சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT