Published : 19 Dec 2015 10:41 AM
Last Updated : 19 Dec 2015 10:41 AM

கண்பசி

என் சிறு வயதில் நான் வயிறார உணவு உண்டிருந்தாலும் எந்தத் தின்பண்டத்தைப் பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

எந்த விளையாட்டுப் பொம்மையைப் பார்த்தாலும் வீட்டில் அதுமாதிரி ஒரு பொம்மையிருந்தாலும் அதை வாங்கித் தர வேண்டும் என அடம்பிடிப்பேன். இதனால் என் பெற்றோர்கள் எனக்கு ‘கண் பசி' அதிகம் என்பார்கள். அப்போதெல்லாம் கண் பசி என்ற அச்சொல்லுக்கு அவ்வளவாக அர்த்தம் தெரியவில்லை.

‘குப்பை அரசியல்’- கட்டுரையைப் படித்ததும் அச்சொல்லின் அர்த்தத்தை என்னால் முழுமையாக உணர முடிந்தது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னும் வேண்டும் என்ற இந்த கண் பசி உள்ளது. மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிகமாக கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கும் இந்த மனித பலவீனத்தை, மயக்கத்தைத் தெரிந்துகொண்ட பன்னாட்டு வணிக சந்தைகள் தங்கள் வியாபாரத்தை வண்ண வண்ண விளம்பரங்கள் மூலமாக டிவி முதல் இணையதளம் வரை எல்லா பொது ஊடகங்களிலும் அறிமுகம் செய்கிறார்கள்.

இந்த மயக்கத்திலிருந்து தெளிய வைக்கும் ரிமோட் கண்ட்ரோல் நம்மிடம்தான் இருக்கிறது. இந்த அழகான உண்மையை, மிக அற்புதமாகச் சொன்னதற்கு நன்றி.

- எஸ்.கே.ஹயாத் பாஷா,வாணியம்பாடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x