Published : 03 Dec 2015 01:29 PM
Last Updated : 03 Dec 2015 01:29 PM

மக்களிடம் கேளுங்கள்

‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் உறைந்திருக்கும் உண்மைகள்’கட்டுரை சமன்பாட்டுடன் எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு வடக்கே மன்னராட்சியில் இருந்த மலைப் பகுதிகள் முதன்முதலில் அதிர்வுக்குள்ளானது சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டபோதுதான். அந்த நேரத்தில் அம்மக்களிடம் உங்கள் விருப்பம் ‘இந்தியாவா… பாகிஸ்தானா?’ என யாரும் கேட்கவில்லை.

இந்தியாவும், பாகிஸ்தானும் அப்படிக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்ற கருத்து ஒரு தரப்பினரிடம் உள்ளது. இருநாடுகளும் தமது சொந்த விருப்பத்துக்கு அளித்த முன்னுரிமையை காஷ்மீர் மக்கள் விருப்பத்துக்கு அளிக்காதுவிட்டதே காரணம் என்ற கருத்தும் மறுபுறம் உள்ளது.

இந்தியாவுக்குச் சட்டம் சாதகமாகவும் பாகிஸ்தானுக்கு மதம் சாதகமாகவும் இருந்ததாகக் கருத்து உள்ளது. எப்படிப் பார்த்தாலும் காஷ்மீரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது மக்களால் அல்ல. அரசுகளால்தான். மோடி அறிவித்துள்ள 8,801 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்குமா அல்லது அதை அமல்படுத்தும்போது புதிய பிரச்சினை ஏதும் முளைக்குமா, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

- சிவ. ராஜ்குமார், சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x