Published : 08 Dec 2015 11:06 AM
Last Updated : 08 Dec 2015 11:06 AM

ஏன் தாமதம்?

வானிலை ஆய்வு மையம் தரும் அறிக்கை முதல்வர் அலுவலகத்துக்கும் தலைமைச் செயலாளருக்கும் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.

100 ஆண்டுகளில் பெய்யாத மழை இப்போது பெய்துள்ளது. அதனால் நடவடிக்கைகள் திட்டமிட முடியவில்லை என்கிறார்கள். இப்போதுள்ள நவீன தொழில்நுட்பம், தகவல் தொடர்புகள், போக்குவரத்து வசதிகள் இவை முன்பு இருந்ததைவிடப் பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்த வசதிகளை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும்.

பாதிப்புகளைக் குறைத்திருக்க முடியும். இப்போதும் அரசாங்கத்தின் சாதாரண ஊழியர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களும்தான் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை விரைந்து செய்கின்றனர். அரசியல் முகம் கொண்ட அதிகாரவர்க்கத்தினர் தங்களை முன்னிறுத்திக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை, உண்மையான சேவையில் காட்டுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது அவசியம்.

- மு. செல்வராஜ், மதுரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x