Published : 15 Dec 2015 08:32 AM
Last Updated : 15 Dec 2015 08:32 AM
‘நிவாரணம் என்பது பிச்சையல்ல’ கட்டுரை நெஞ்சில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இயற்கை சீற்றங்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டோரை மட்டுமே மையமாகக் கொண்டு நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டிருப்போர் எந்தவித நிவாரணமும் இன்றி படும் அவஸ்தைகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.
கட்டுரையாளர் போல நேரடியாகக் களப்பணியில் ஈடுபட்டோரின் மூலம் இந்த அவலங்கள் வெளியே தெரிகின்றன. நிவாரணத் தொகை வழங்குவதற்கு ஆய்வு அறிக்கை அளிக்கும் அதிகாரிகள் இது போன்றவர்க்கும் நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் இதனைக் கருத்தில் கொண்டு உதவினால் இன்னல்படும் மக்கள் அனைவருக்கும் பலன் கிடைக்கும்.
- சு.தட்சிணாமூர்த்தி, கோயம்புத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT