Published : 19 Dec 2015 10:43 AM
Last Updated : 19 Dec 2015 10:43 AM
நாகர்கோவிலில் அழிக்கப்பட்டுள்ள குளங்கள் பற்றிய கட்டுரையில் ஐந்து குளங்களை மூடிவிட்டார்கள் என்றும் புத்தேரி குளத்தை அழிப்பதற்கான அபாய சங்கு ஊதியிருப்பதையும் அறிய முடிகிறது.
செம்மாங் குளத்தை மூடி ஏற்படுத்தப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையம் இன்றும் ‘குளத்து பஸ்ஸ்டாண்டு’ என்றே அறியப்பட்டுவருகின்றது. கிறிஸ்டோபர் பேருந்து நிலையமும் நான் அறிய குளமாக இருந்தது. சென்னை ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதி பெரும்பாலும் சமமான நிலங்களே.
ஆனால், நாகர்கோவிலின் நிலை அப்படியல்ல. அனைத்தும் மலைப் பகுதிகள். எனவே, நீரின் வேகம் அதிகமாக இருக்கும். சென்னை செம்பரம்பாக்கம், புழலேரி கண்ட வெள்ளத்தை பேச்சிப்பாறையும் பெருஞ்சாணியும் கண்டிருந்தால் பழையாறின் பெருக்கத்தில் நாகர் கோவில் ஜலசமாதி ஆகியிருக்கும்.
பள்ளங்களில் உள்ள பல்லடுக்குக் கான்கிரீட் மரங்களும் மூழ்கியி ருக்கும். ஆனால் அப்போது அழிக்கப் பட்டுள்ள குளங்கள் தங்களின் பட்டா பூமியை அடையாளம் காட்டியிருக்கும்.
- எஸ்.எம். அந்தோணி, அரியலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT