Published : 23 Dec 2015 10:29 AM
Last Updated : 23 Dec 2015 10:29 AM

கேள்வி கேட்பது தவறா?

கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் கேள்வி கேட்கும் உரிமை இல்லாத நிலை தற்போது உருவாகியுள்ளது, இது வெட்ககரமான நிகழ்வு. கல்வி வியாபாரமாகிவிட்ட பிறகுதான் இந்த நிலை. என்றைக்கு, அரசு தன்னுடைய சமூகப் பொறுப்பைக் கை கழுவி விட்டு, கல்வியைத் தனியார்வசம் ஒப்படைத்து அவர்கள் மனம் போனபடி கல்வி நிறுவனங்களை அமைக்கவும் அவர்கள் நினைத்தபடி அவற்றை நிர்வகிக்கவும் அளவற்ற உரிமையைக் கொடுத்ததோ அன்றே, பெரு முதலாளிகளின் உடும்புப் பிடியில் அது சிக்கிக்கொண்டது.

பெரும்பாலான கல்வி நிலையங்களில் மாணவர்கள் அடிமைகள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் சரி, அதிகக் கட்டணம் அநியாயமாக வாங்கினாலும் சரி, எல்லாவற்றையும் பொறுமையாக சகித்துக்கொண்டு, வாய்மூடி அமைதி காத்து இருப்பதைத் தவிர, வேறு வழியே கிடையாது. இப்படி, இன்றைய தலைமுறை மாணவர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை இழந்து, உள்ளக் குமுறல்களோடு வாழ்வது சமுதாயத்துக்கு நல்லது அல்ல.

இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாள் இது வெடித்தே தீரும். அப்போது, அதன் விளைவு, முப்பது நாள் மழை மூன்று நாளில் பெய்து விளைவித்த சேதங்களைவிட அதிகமாக இருக்கும். ஏறக்குறைய 50 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்தவன் என்ற முறையில், இதைச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமையென்று எண்ணுகிறேன்.

- தா. சாமுவேல் லாரன்ஸ், முன்னாள் துணை முதல்வர், மதுரை அமெரிக்கன் கல்லூரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x