Published : 02 Dec 2015 03:11 PM
Last Updated : 02 Dec 2015 03:11 PM

வழக்குகளுக்கான ஆட்சி!

ஒரு தெருப் பாடகரை அகில இந்திய அளவுக்கு அறிமுகப்படுத்தி, யார் இவர் என்று கேட்கும் அளவுக்குச் செய்த தமிழக அரசுக்கு வாழ்த்துகள்.

சாதாரண மனிதனும் அரசை எதிர்த்தால் புகழ் அடையலாம் என்கிற கோட்பாட்டை நிலைநிறுத்திய தமிழக அரசைப் பாராட்டியே தீர வேண்டும்.

- வி. ஆசைத்தம்பி, விளார், தஞ்சை.

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் - இது வள்ளுவம். ஏன் என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று பாடினார் எம்.ஜி.ஆர். இன்று ஏன் என்று கேட்டாலே வழக்குத் தொடுப்பதன் மூலம் இது வழக்கமான ஆட்சியில்லை, வழக்குகளுக்கான ஆட்சி என்று நிரூபித்து விட்டார்கள்.

- கணபதி சுப்பையா (இணையதளம் வழியாக…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x