Published : 24 Dec 2015 11:15 AM
Last Updated : 24 Dec 2015 11:15 AM

காலத்தோடு அங்கீகரிக்க வேண்டும்!

கலை ஞாயிறு பகுதியில் வெளியான சுகுமாரனின் கட்டுரை தொடர்பாகச் சில கருத்துகள். தமிழ் இலக்கிய உலகில் யாவராலும் மதிக்கப்படும் ஆ.மாதவன் என்கிற மூத்த சிறுகதை எழுத்தாளர், சாகித்ய அகாடமி எனும் சிகரம்தொட 82 ஆண்டுகள் ஆகின்றன என்பது எவ்வளவு விந்தையானது!

ஆண்டுக்கு ஒரு படைப்பாளிக்கு மட்டும்தான் சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை இந்தச் சூழலில் கேட்க வேண்டியிருக்கிறது. அரை நூற்றாண்டாக எழுதிக்கொண்டேயிருக்கும் மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் இன்னும் எத்தனைக் காலம்தான் காத்திருப்பது? ஆண்டுக்காண்டு புதிது புதிதாய் உருவாகிவரும் எழுத்துப் பரம்பரையைச் சாகித்ய அகாடமியைவிட யார் சிறப்பாக ஊக்கப்படுத்திவிட முடியும்? விருதுக்கான காலகட்டத்துக்குள் வெளியாகும் நூல்களை மட்டுமே கருத்தில்கொள்வது என்கிற வரையறை ஏற்புடையதா? மூத்த எழுத்தாளர்கள் அனைவரையும் அவர்கள் எழுதிய படைப்பிலக்கியங்களோடு அவர்கள் வாழும் காலத்தில் சாகித்ய அகாடமி பாராட்ட வேண்டும். கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், உரைநடை, நாட்டார் வழக்காறு, ஊடக எழுத்து என்று பலவகையாகப் பகுக்கப்பட்டு, அந்த முயற்சிகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு மூத்த தலைமுறை எழுத்தாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை அவரது அனைத்துப் படைப்பிலக்கியங்களையும் முன்நிறுத்தி அளித்துப் பெருமைப்படுத்திட சாகித்ய அகாடமி முயற்சி எடுக்க வேண்டும்.

முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x