Published : 16 Dec 2015 10:29 AM
Last Updated : 16 Dec 2015 10:29 AM
‘இப்போது சொல்லுங்கள், அடையாறு ஆறா, சாக்கடையா?’ என்கிற கட்டுரை சொல்ல வேண்டியதைச் சொல்கிறது. அடையாற்றிலிருந்து மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சேப்பாக்கம் செல்லும் வாய்க்கால் பஞ்ச காலத்தில் மக்களுக்கு வேலை தருவதற்காகத் தோண்டியது. ஒருநேரத்தில் கூவத்தில் மக்கள் தீர்த்தமாடியிருக்கிறார்கள்.
ஆறு என்றுதான் பெயர், ஆனாலும் செம் பரம்பாக்கம் ஏரிக்கு அடையாறு ஒரு வடிகால். 1975 வாக்கில் அடையாறு முகத்துவாரத்தில் எதையோ கட்டவோ/ மாற்றவோ திட்டமிட்டார்கள். அதைக் கடுமையாக எதிர்த்து ‘சுதேசமித்திர’னில் பெரியவர் பக்தவத்சலம் எழுதியது நினைவிருக் கிறது. அது செம்பரம்பாக்கம் ஏரியின் வடிகால், அதில் கைவைக்கக் கூடாது என்று எழுதியிருந்தார்.
திதஞ்சையில் ஆறுகள் பாசன ஆறுகளாகவும் இருக்கும், வடிகால்களாகவும் மழைக் காலத்தில் மாறிவிடும். இதை உணர வேண்டும். ஒருபகுதியை விவரிக்கும் போது ஆங்கிலத்தில் ‘‘area drained by the river ...” என்றுதான் சொல்வார்கள்.
இவ்வழியில், பெருங்களத்தூரிலிருந்து அடையாறு வரை “area drained by Adyar” என்றுதான் நினைவில்/பிரக்ஞையில் பதிந்திருக்க வேண்டும். ஆற்றைவிடக் கவனமாக வடிகால்களை - அடையாறு உட்பட - ஆண்டுதோறும் தூர் வார வேண்டும்.
அடையாறு ஆறாகஇல்லாததால் கரை உயரமாக உருவாகவில்லை. கரையின் உள்வாயில் குடியிருப்பதுதான் பிரச்சினை. அதாவது, கரையிலிருந்து ஆற்றுக்குள் இறங்கும் பகுதியில். கான்கிரீட் கரைகளை விவசாயிகள் எதிர்த்தார்கள். அதற்குப் பல நல்ல காரணங்கள்.
- தங்க ஜெயராமன்,திருவாரூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT