Published : 22 Dec 2015 11:57 AM
Last Updated : 22 Dec 2015 11:57 AM
‘இரு வழிகள், நாம் எந்த வழி?’ கட்டுரை கண்டேன். நிகழ்கால வாழ்க்கைச் சிக்கல்களை எளிதாக உணர்த்தியது. தேவைக்காக வாழ்ந்தது போய் தேவையை உருவாக்கிக்கொண்டு வாழும் நிலை பற்றிக் கட்டுரையாளர் விவரித் துள்ளார். இந்தியாவில் நாள்பட்ட நோயினாலும், விபத்துக்களாலும் சுமார் 40% உயிரிழப்பு ஏற்படுவதாக உலகசுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இத்தகைய உயிரிழப்புகளுக்கு முதன்மைக் காரணம் மனஅழுத்தமே. சீரற்ற பொருளாதார வளர்ச்சி, ஏற்றத்தாழ்வான வருமானம், மக்கள்தொகைப் பெருக்கம் போன்ற வற்றையும் இதற்கான ஆதாரமாகக் கூறலாம். ஆனால், சுகாதாரத்தைப் பொறுத்தவரை நமது இந்திய அரசு செலவிடுவதோ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% மட்டுமே. சுகாதார மேம்பாட்டில் எந்த அரசும் கவனம் கொள்வதில்லை.
- நிலவளம் கதிரவன், நல்லாண்பிள்ளைபெற்றாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT