Published : 18 Dec 2015 10:57 AM
Last Updated : 18 Dec 2015 10:57 AM
மாணவர் அரசியல் குறித்தான மீண்டும் ஒரு விவாதத்துக்குக் களம் ஏற்படுத்தி தந்த ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி. மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப் பதற்காக அல்ல, அதனைக் கேட்பதற்குக் கூட பெரும்பாலான கல்லூரிகளில் ஆளில்லை.
மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக்கூடிய மாணவப் பிரதிநிதிகள் இல்லாதது காலத்தின் அவமானம். கல்லூரியில் நடக்கும் பிரச்சினை களைத் தீர்க்க மாணவர்கள் முயலும்போது, சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு களைய வேண்டும் என்பது போன்ற படிப்பினை களும் மாணவ சமுதாயத்துக்குக் கிடைக்கும்.
இப்படி வருங்கால இந்தியாவை வழி நடத்தக்கூடிய தலைவர்களை உருவாக்க மாணவர் அரசியல் உதவுகிறது. ஆக மாணவர் அரசியல் மற்றும் மாணவப் பிரதிநிதி களை ஒவ்வொரு கல்லூரிகளிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்ய வேண்டியது ஒவ்வொரு கல்லூரியின் கடமையாகும்.
- வி.எம்.முஹம்மது பஷீர், மாணவர், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT