Published : 22 Dec 2015 11:52 AM
Last Updated : 22 Dec 2015 11:52 AM
அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற அரசாணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். ஆகமவிதிகளின் படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்கிறது தீர்ப்பு. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது தமிழக முற்போக்காளர்களின் நீண்ட நாள் கனவு. அது நெடிய போராட்டத்துக்குப் பிறகு செயல்வடிவம் பெற்றது. விரும்பும் சாதியினர் அர்ச்சகராகும் வகையில் வேத வகுப்புகளும் துவங்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டு திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒரே வீச்சில் இந்த அரசாணை தூக்கி எறியப்பட்டுள்ளது. இது போன்ற தீர்ப்புகள் முற்போக்காளர்களுக்கும் சமத்துவ நீதிக்கும் எதிரானது.
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT