Published : 25 Dec 2015 11:03 AM
Last Updated : 25 Dec 2015 11:03 AM
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஓடோடி வந்து உதவிய அனைவரையும் காலம் தன் ஏட்டில் பதிவுசெய்து பாராட்டிக்கொண்டேயிருக்கும். சென்னை சேப்பாக்கத்தில் வரிசையில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கும் மக்களின் முகத்தில் மலர்ந்த புன்சிரிப்பை புகைப்படத்தில் பார்த்தபோது மீண்டும் மண்ணில் மலர்ந்துள்ள மனிதநேயமே தெரிந்தது. பல்வேறு பொருட்களைத் தந்து உதவிய உள்ளங்களையும், அவற்றைப் பாதிப்புக்குள்ளானவர்களின் இருப்பிடத்துக்கே கொண்டுசேர்த்த தன்னார்வலர்களின் கரங்களையும் ஒருங்கிணைத்த ‘தி இந்து’வையும் என்றென்றும் காலம் மறக்காது.
- கு.மா.பா. கபிலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT