Published : 26 Dec 2015 11:15 AM
Last Updated : 26 Dec 2015 11:15 AM

தொழுகையில் ‘தி இந்து’ கட்டுரை

‘இறைத் தூதர் என்ற மாமனிதர்’ என்ற ஆக்கத்தைப் படித்தேன். ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. நபிகளாரது மகத்தான வாழ்வின் எளிமை, கருணை, நற்குணம் மற்றும் மனித நேயப்பண்பை ‘தி இந்து’ வாசகர்களுக்கு ரத்தினச் சுருக்கமாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

சென்னை அண்ணா நகர் (கிழக்கு) பள்ளி வாசலில் ( 25.12.15 ) வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையின்போது, இமாம் (தொழுகை நடத்துபவர்) தொழுகைக்கு முன்பாகப் பிரசங்கம் செய்கையில் தங்களின் கட்டுரையை மேற்கோள் காட்டிப் பேசியதோடு, கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட ஏழைகளின் தோழர் என்ற சம்பவத்தையும் எடுத்துரைத்தார்.

இதுபோன்ற நல்ல ஆக்கங்களை நீங்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களைக் களையுமாறு நான் உங்களை இந்தத் தருணத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

- வி.எஸ். முஹம்மது முஸம்மில்,சென்னை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x