Published : 26 Dec 2015 11:18 AM
Last Updated : 26 Dec 2015 11:18 AM

பகடைக்காய்கள் அல்ல!

மதமும் சமயச் சடங்குகளும் மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவை என்பதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால், ஆட்சியைப் பிடிக்க மதத்தை ஒரு ஆயுதமாக அதிகார வர்க்கம் தனது கையில் எடுக்கும்போது அங்கு மதம் மிக ஆபத்தான விஷயமாக மாறிவிடுகிறது.

வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் சமயச்சடங்குகள் அங்கு மக்களின் வாழ்வைச் சூறையாடும் கொடூர ஆயுதமாக மாறிப்போகின்றன.

இதேதான் ‘அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ எனும் போர் முழக்கத்தின் விபரீத விளைவாகவும் மாறிப்போயிருக்கிறது. ராமர் கோயில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படும் அந்த இடம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அப்படியிருக்க அரசாட்சியைப் பிடிக்க மக்களைப் பகடைக் காயாக்க அரசியல்வாதிகள் முயல்வதை அனுமதிக்க முடியாது.

- சூரியப்பிரியா,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x