Published : 19 Dec 2015 10:40 AM
Last Updated : 19 Dec 2015 10:40 AM
அரசியல் மாற்றம் என்பது எந்த அரசியல் கட்சிக்கும் எந்த நாட்டிலும் ஏற்படலாம். வெனிசுலாவிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டதும் இந்த நிலையில்தான். இடதுசாரிக் கட்சியான ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி 17 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்தது.
அதன் தலைவர் ஹியூகோ சாவேஸ், மீட்டர் சர்வாதிகாரிகளின் பிடியிலிருந்து வெனிசுலாவை மீட்டார். ஏழைகளுக்கு வசதியைக்கூட்ட இயற்கை வளங்களை அரசுடைமையாக்கினார்.
இது நல்ல பயன் தராததால், நாட்டிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. எனவேதான் வலதுசாரிக் கட்சி வென்றது. இதே இடதுசாரிக் கட்சி அர்ஜெண்டினாவிலும் தோல்வி கண்டுள்ளது.
இதனால் இடதுசாரிக் கட்சிகள் தோல்வியையே எதிர்கொள்ளும் எனக் கருதுவது பிழையே. தோல்வியிலிருந்து தப்ப எதிர்க் கட்சிகளைக் குறைகூறுவதென்பது பயன் தராது என்பதை ‘வெனிசுலாவின் அரசியல் மாற்றம்’ தலையங்கம் உறுதிப்படுத்துவது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.
- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT