Published : 14 Dec 2015 10:42 AM
Last Updated : 14 Dec 2015 10:42 AM
பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு நிகழ்வு முதலாய், இருவருக்குமிடையே நட்பு நீடித்த காலம் குறித்து, மூத்த பத்திரிகையாளரான மாலனுக்கும், ருத்ரனுக்கும் நடந்த சொற்போரை விவாதக் களம் பதிவு செய்திருப்பது கவனத்துக்குரியது.
பாரதிதாசன் பற்றி பாரதி இரண்டு இடங்களைத் தவிர, வேறு எங்குமே குறிப்பிடவில்லை என்று ருத்ரன் கூறியுள்ளார்.
பக்கவாட்டில், கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் நூலிலிருந்து எடுத்துக்காட்டுகள் அடுக்கியுள்ளார் மாலன். இந்த விவாதத்தில் வாசகர்களுக்குப் பல தகவல்கள் கிடைப்பது வரவேற்கத் தக்கது.
- கு.மா.பா. கபிலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT