Published : 18 Dec 2015 10:59 AM
Last Updated : 18 Dec 2015 10:59 AM
‘வெள்ளம் கொண்டுபோன பொக்கிஷங்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மனதைக் கனக்கச் செய்தது. நான் ஒரு மிகச் சாதாரண பதிப்பாளன்.
புத்தகக் காட்சியை ஒட்டி நானும் 4 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். அச்சடித்த பல புத்தகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீணாய்ப் போய்விட்டன.
எனது ஓய்வூதியப் பணத்தில்தான் செலவு செய்து புத்தகத்தை அச்சடிக்கிறேன். இந்த வெள்ளம் எனக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டது. நான் எப்போதும் சேமித்து வைக்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருப்பவன். உடனே ஒரு விஷயத்தை முடிப்பதற்குமுன் ஊறப்போடுபவன்.
உதாரணமாக ஓராண்டுக்கு மேலாக ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கங்களைச் சேகரித்து வைத்திருந்தேன். அதைத் தவிர சினிமா செய்திகளைப் பற்றிய பக்கம், ஆனந்த ஜோதியின் பக்கம் என்று. இந்த வெள்ளத்தில் எல்லாம் நனைந்து முழுக்க வீணாகிப் போய்விட்டன.
எல்லாவற்றையும் தூக்கிப் போடும்படி ஆகிவிட்டது. அதைத் தவிர பல பத்திரிகை இதழ்களும் போய்விட்டன. இந்த வெள்ளம் எனக்கு சொல்லிக் கொடுத்தப் பாடம். 'உடனே படி. சேகரித்து வைக்காதே. படிக்க முடியாவிட்டால் தூக்கிப் போட்டுவிடு!'
- அழகியசிங்கர், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT