Published : 07 Dec 2015 10:25 AM
Last Updated : 07 Dec 2015 10:25 AM
‘வரலாறு காணாத மழை’ என்று கூறிவிட்டு, சென்னையின் தவறான கட்டுமானங்களும் ஆக்கிரமிப்புகளும் எப்படிக் கவனிக்காமல் விடப்பட்டனவோ, அதைப் போன்றே நிவாரணப் பணிகளிலும் ஒருங்கிணைப்பு என்பதைக் காணவே முடியவில்லை.
அனைத்துத் துறைச் செயலாளர்களும் பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கள் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன என்று கூறும் அதே சமயத்தில், ஊருக்குள் மக்களின் கதறல் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது.
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் காப்பாற்றி, அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட்டு செய்தியாளர்களிடம் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், மக்களைக் காப்பாற்றுவது உட்பட ஆயிரம் வேலைகளை வைத்துக்கொண்டு அனைத்துப் பேருந்துகளும் ஓடுகின்றன என்றும், 80 சதவிகித மின்சாரம் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் சொல்வது யாருக்காக? ஆளும்கட்சி இந்த நிவாரண விஷயத்தில் அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைத்துப் பணியாற்றி, தமிழகத்தில் ‘வரலாறு காணாத துயர் துடைப்புப் பணி’ நடந்தது என்று பெயர் எடுத்திருக்காலம்.
- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT