Published : 08 Dec 2015 10:38 AM
Last Updated : 08 Dec 2015 10:38 AM
‘பெண்களைக் காப்போம்’ தலையங்கம் ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு புதுமணத் தம்பதிகளும் படிக்க வேண்டிய ஒன்று. ஒரு குடும்பம் பண்போடு இயங்குவதில் தலைவிக்குத்தான் பொறுப்பு அதிகம்.
அப்படிப்பட்ட கூர்மையான அறிவுள்ள பெண் குழந்தைகளை வேண்டாம் என்று கருவிலேயே அழிப்பது கொடும் பாவம். அதற்குப் பெண்ணினமே துணைபோவது அதைவிடக் கொடுமை. சமீப காலங்களில் வயதான பெற்றோர்களைப் பராமரிப்பது அவர்களின் பெண்ணும் மாப்பிள்ளையும்தான். மகன்கள் பெற்றோரைக் கைவிடுவது சாதாரணமாக இருக்கிறது.
படித்தவர்களும் படிக்காதவர்களும் தயவுசெய்து இதை உணர்ந்து பெண் குழந்தைகளைப் பிறக்கவிடுங்கள். பெண்களைக் காக்க வேண்டும் என்ற உண்மையான ஆதங்கத்துடன் தகுந்த நேரத்தில் தலையங்கம் எழுதிய ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி. பெண்ணினத்துக்குத் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!
- பெ. குழந்தைவேலு,வேலூர், நாமக்கல் மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT