Published : 08 Dec 2015 10:49 AM
Last Updated : 08 Dec 2015 10:49 AM
நிதி குறைவு
தமிழக வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட மோடி விரைந்து வந்தது நிச்சயம் பாராட்டுக்குரிய செயல்தான். ஆனால், அவர் கொடுத்த நிதி போதுமானதல்ல. பெயர் தெரியாத நாடுகளுக்கெல்லாம் 10 ஆயிரம் கோடி, 15 ஆயிரம் கோடி என்று வாரி வழங்கிய மோடி, சொந்த நாட்டு மக்கள் நிற்கதியாக நிற்கிறபோது குறைவான தொகையை வழங்குவது ஏன்? இதனை தமிழக அரசு சுட்டிக்காட்டத் தவறிவிட்டது.
- தங்கமணி, இணையதளம் வழியாக…
***
மத்திய அரசு சார்பில் நிதி வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால், அது பாதிக்கப்பட்ட மக்களை முறையாக சென்றடையும் என்பதற்கு தமிழகத்தில் எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, வழங்கும் நிதியில் பெரும்பகுதியை நிவாரணப் பொருட்களாகவும், அத்தியாவசியப் பொருட்களாகவும் வழங்குவதே நல்லது. மாநில அரசும் தனது உதவியைப் பணமாகச் செய்வது சரியாக இருக்காது.
- அன்னக்கொடி,திருமங்கலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT