Published : 07 Nov 2015 10:28 AM
Last Updated : 07 Nov 2015 10:28 AM
விண்வெளிச் சாதனைகளில் நாம் தெரிந்துகொண்டது சொற்பம்தான். இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதை ‘எங்கே இன்னொரு பூமி?’ கட்டுரை காட்டுகின்றது. பூமியைப் போன்ற கிரகங்கள் இருப்பினும் அவற்றைப் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்காததன் காரணங்களை விரிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளார் என்.ராமதுரை. அறிவியல் மாணவர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய விளக்கங்களுடன் தமிழில் எழுதியிருப்பது அருமை. வெறும் அரசியல் சமூகக் கட்டுரைகளுடன் அறிவியல் கட்டுரைகள் வருவது வாசகர்களையும் பயனாளிகளையும் ஈர்க்கும். ‘தி இந்து’வுக்கு வாழ்த்துகள்.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
மூத்த எழுத்தாளர் ராமதுரையின் ‘எங்கே இன்னொரு பூமி?’ கட்டுரை வாசித்தபோது பூமியையும் அதன் புதிர்களையும் இவ்வளவு எளிமையாகச் சொல்லிவிட முடியுமா என்ற ஆச்சரியம் மேலோங்கியது. கற்பனைக்கு எட்டாத அண்டசராசரத்தின் வெளியை, அதன் இருட்டை, கனகச்சிதமாக வெளிப்படுத்திவிட்டது கட்டுரை. இயற்கை பாரபட்சம் பார்க்காது, ஆகையால் இன்னொரு பூமியும் இன்னொரு மனிதக் கூட்டமும் வாழ்ந்தேதான் தீரும் என்பதை உணரும்போது கற்பனைக் குதிரை எல்லையில்லாமல் பறக்கிறது.
- எஸ். சஞ்சய், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT