Published : 05 Nov 2015 10:49 AM
Last Updated : 05 Nov 2015 10:49 AM
‘கர்னாடக இசை கற்றுக்கொள்ள வேண்டும் என யார் அழுகிறார்கள்?’ தலைப்பைப் பார்த்தவுடன் சாதியை அடையாளப்படுத்துவது போன்று எண்ணம் தோன்றியது. ஆனால், யதார்த்த வாழ்க்கையில் “மாதம் இ.எம்.ஐ. கட்ட முடியவில்லை என்றால் அது வெற்றி இல்லைதானே” என்ற வரிகள் சாதாரண மனிதர்களின் உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இந்தப் பேட்டி தீபாவளி மலருக்காக என்ற இறுதி வரியைக் கண்டதும் உடனடியாக அதை வாங்க மனம் துடித்தது. பேட்டி அளிப்பவரின் தகுதியையும் அறிவையும் நியாயப்படுத்தும் வகையில் இசைக் கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியனைப் பேட்டி கண்ட ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
- க. அறி, செங்கல்பட்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT