Published : 06 Nov 2015 10:49 AM
Last Updated : 06 Nov 2015 10:49 AM
ஒரு ஆட்சியாளர் மனது வைத்தால் புதர்மேடான ஏரியைப் புத்துயிர் பெறச் செய்ய முடியும் என்பதைப் புத்துயிர் பெற்ற ஏரி கட்டுரை காட்டியது. ஒவ்வொரு அரசு அதிகாரி யும் தன் பணிக் காலத்தில் இது போன்ற பணிகளைச் செய்வதில் கவனம் செலுத்தினால், தமிழகம் நீர்மிகு மாநிலமாகும் என்பது நிச்சயம். அதற்கு இளம் அதிகாரிகள் செயலில் இறங்க வேண்டும். மூத்த அதிகாரிகள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.
- பெ. சிவசுப்பிரமணியன், சென்னை.
தமிழகமெங்கும் உள்ள ஏரிகள், குளங்கள் தூர் வாரப்படாமல் புதர் மண்டிக்கிடப்பதால், பெய்கின்ற மழை நீர் வீணாகப் போகும் நிலைதான் இன்னும் தொடர்கிறது. இதற்கு இடையில் வாலாஜாவின் ஏரியை மீட்டெடுத்தவர்களைப் பற்றிய ‘புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி’ செய்திக் கட்டுரை மெய்சிலிர்க்க வைத்தது. ‘ஏரி காத்த ராமர்’போல சுகன் தீப் சிங் பேடி என் கண்களுக்கு ‘ஏரி மீட்டெடுத்த ராமனாக’க் காட்சி அளிக்கிறார்.
- சி.குருபால்ராஜ், புளியங்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT