Published : 05 Nov 2015 10:49 AM
Last Updated : 05 Nov 2015 10:49 AM

முழு வரலாற்றை அறிய

‘குமரி சுதந்திரப் போராட்டம்’ கட்டுரையில் ‘தொடரும் சோகம்’ எனக் கட்டுரையாளர் பட்டியலிட்டவை முற்றிலும் உண்மை. 1954 ஜூலை மாதம் மூணாறில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. நேசமணி, அப்துல் ரசாக், சிதம்பரநாதன் எனப் பலரும் மூணாறுக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர். மூணாறு பிரச்சினைக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்தபோது, அப்பிரச்சினையைக் குமரி இணைப்புப் பிரச்சினையாக, குமரி உரிமை மீட்புப் போராட்டமாக குமரி மண்ணில் மாற்றிய குஞ்சன் நாடாரைக் குறிப்பிடாமல் விட்டிருப்பது குறையாகவே உள்ளது.

அதனைக் கட்டுரை ஆசிரியர் வரும் காலங்களில் கவனிக்க வேண்டும். தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கக்கோரிப் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டபோது சிதம்பரநாதன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் என்பது சரியானதல்ல. தமிழர் பகுதிக்கு எந்தவொரு நல்ல திட்டமும் முதல்வர் பட்டம் தாணுபிள்ளை செய்யவில்லை என்பதால்தான் பதவியை விட்டு அவர் விலகினார். வரலாற்றை இன்னும் முழுமையாக அறிய பி.எஸ்.மணி மற்றும் நேசமணியால் அன்றைய காலகட்டத்தில் நடத்தப்பட்ட மாத இதழ்கள் உதவியாக இருக்கும்.

- செல்வன், எழுத்தாளர், ’தி இந்து’ இணையதளத்தில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x