Published : 25 Nov 2015 10:35 AM
Last Updated : 25 Nov 2015 10:35 AM
கருத்துப் பேழை பகுதியில் வெளியான ‘செல்விகளின் கதை!’ கட்டுரை கடலூர் மழை, வெள்ளத்தின் கோர முகத்தைப் பதிவுசெய்திருக்கிறது. செல்விகளின் கதைகள் தொடர்வதுதான் நாம் தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்களின் சாதனையா? குழந்தைகளும், அவர்களின் கனவுகளும் சிதையும் பயங்கரம் தொடர்ந்துகொண்டிருப்பது மிகவும் வேதனையானது.
ஒவ்வொரு உயிரையும் உருப்படியாக, எண்ணிக்கையாக, ஓட்டாக மட்டும் பார்க்கும் அரசுகளை மக்களுக்கான அரசுகளாக நிச்சயம் ஏற்க முடியாது. இது போன்ற உண்மைகளின் வெளிப்பாடு அரசிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் முக்கியத்துவத்தை மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- சு. ஜெகதீசன், அம்பை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT