Published : 03 Nov 2015 11:12 AM
Last Updated : 03 Nov 2015 11:12 AM

உரிமைப் போராட்டம்

குமரி சுதந்திரப் போராட்டம் தமிழகத்தின் முக்கியப் போராட்டம். 1950-55 காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் தமிழ் பகுதியின் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யவில்லை. மேலும் கல்விக்கூட அனுமதி மறுப்பு, அரசுப்பணியில் சேர வாய்ப்பு இன்மை என தமிழர்கள் அடைந்த துயரம் ஏராளம். சில சாதியினருக்கு மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டது.

16 வயது முதல் 60 வயது ஆண்களுக்கு மட்டும் தலைவரி. இதனை கொடுக்க முடியாததால் பலர் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்தனர். 70% மக்கள் குறிப்பிட்ட ஒரே மொழி பேசினால் அப்பகுதி அந்த மொழி சார்ந்த பிரதேசம் என தார் கமிஷன் அறிவுறுத்தியது. ஆயினும் தேவிகுளம், பீர்மேடு தாரைவார்க்கப்பட்டது. இதற்காகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தவர் மார்ஷல் நேசமணி.

அவரின் வரலாற்றை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்வது அவசியம்

- ப. மணிகண்டபிரபு, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x