Published : 26 Nov 2015 09:25 AM
Last Updated : 26 Nov 2015 09:25 AM
இந்தியாவில் சகிப்புத்தன்மை மற்றும் பாதுகாப்பின்மை அதிகரித்துவிட்டதாகவும் வெறுப்பு அரசியல் அதிகரித்துவிட்டதால் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று பாலிவுட் நடிகர் ஆமீர்கானிடம் அவரது மனைவி கேட்டதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையிலேயே ஆமீர் கான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதற்காக அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்களை நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்றும் அரசியல் உள் நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கின்றனர் என்றும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாய்வதும் சற்றும் நியாயமில்லாதது.
மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதை அரசு தெளிவாக ஆராய்ந்து அதைத் தீர்க்க முயல வேண்டும். அதை விடுத்து அரசுக்கு எதிராகக் குரலெழுப்புகிறவர்களை மிரட்டுவதும் கண்டிப்பதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அழகல்ல. நாம் ஒரு ஜனநாயக நாட்டில் நிம்மதியாக வாழுகிறோம் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்படவேண்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT