Published : 24 Nov 2015 11:47 AM
Last Updated : 24 Nov 2015 11:47 AM

எல்லோரும் எதிரானவர்களே

‘இஸ்லாம் மீதான ஐஎஸ்ஸின் யுத்தம்’ கட்டுரை, இஸ்லாம் சொல்வது என்ன என்பதைச் சுருக்கமாக, எளிதாக விளக்கியது. உண்மையில், இது இஸ்லாம் மீதான போராகத்தான் கருத வேண்டும் என்று ஆணித்தரமாக வாதங்களை அடுக்கியுள்ளார் கட்டுரையாளர். உண்மையான முஸ்லிம்களுக்கு, தீவிரவாதத்தில் உடன்பாடு இல்லை. கண்டனம் செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் வகுத்தளித்த பாதையில், எந்த நிலையிலும் இத்தகைய கொடிய செயல்களுக்கு மன்னிப்பு கிடையாது என்பதை உரக்கச் சொல்லியுள்ளார். இதன் மூலம் முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்தான், அதை ஆதரிப்பவர்கள் அல்ல என்று உலகுக்கு உணர்த்தியுள்ள கட்டுரையாளர் தனது கடமையைச் சரியாகச் செய்துள்ளார்.

- மு. செல்வராஜ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x