Published : 17 Nov 2015 10:59 AM
Last Updated : 17 Nov 2015 10:59 AM

வேதனை அளிக்கிறது

அன்புச் செல்வம் எழுதிய 'அம்பேத்கரை மறந்த கல்விப் புலம்' கட்டுரை படித்தேன். தலைவர் களின் கருத்துகளை மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆராய்ச்சி மூலமாகப் பொதுமக்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டிய கல்வி இருக்கை, எந்தவிதமான பயன்பாடும் இல்லாமல் இருப்பது நல்லதல்ல.

அதைக் கல்வி அமைப்புகளும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது இன்னும் வேதனை. பல கோடிகள் ஒதுக்கீடு செய்தும் எந்தவொரு சிந்தனைகளையும் பரப்பாமல் இருப்பதை மாற்ற வேண்டும். ஓட்டுகளைப் பெற தலைவர்களின் படங்களைப் பயன்படுத்துவதைப் போல நிதிகளைப் பெறுவதற்காக மட்டுமே தலைவர்களின் பெயரில் இருக்கும் கல்வி இருக்கைகள் பயன்படுகின்றன என்ற செய்தி மனதை வலிக்கச் செய்கிறது.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x