Published : 19 Nov 2015 10:30 AM
Last Updated : 19 Nov 2015 10:30 AM

தென்மாவட்ட மக்களின் மனநிலை

‘சென்னையை அப்பிடியே அலேக்கா தூக்கிருவோமா?’ கட்டுரை சென்னையைப் பற்றிய தென்மாவட்ட மக்களின் மனநிலையை நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லியது. பிற மாவட்ட மக்கள் மின்தட்டுப்பாட்டால் புழுங்கிய போது சென்னையில் தடையில்லா மின்சாரம் கிடைத்ததை ஏக்கத் தோடு பொருமியதை அழகாகப் பதிவுசெய்திருக்கிறார். அரசுத் துறைகளின் செயல்பாடு தலை நகரில் சுறுசுறுப்பாக இருப்பது மகிழ்ச்சியே. அதே சுறுசுறுப்பைப் பிற மாவட்டங்களிலும் காட்டினால் நன்றாக இருக்கும். பாதிக்கப்படும் மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான்.

- ரா.பொன்முத்தையா, தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x