Published : 19 Nov 2015 10:34 AM
Last Updated : 19 Nov 2015 10:34 AM

மனிதன் மாறலாம்... இயற்கை மாறாது!

தன் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஐ.நா. உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிடமிருந்தும் பாராட்டைப் பெறுகிறார். சுனாமி, தானே புயல் என அத்தனை இயற்கைப் பேரிடரிலும் கடலூர் தத்தளித்தாலும் தமிழக அரசும் கடலூர் மாவட்ட நிர்வாகமும் பாடம் கற்றுக்கொண்டதாகவோ கற்றுக்கொள்ள விரும்பியதாகவோ தெரியவில்லை. இதனை ஆவணப்படுத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையை `கொல்வது மழை அல்ல!' கட்டுரை உரிய நேரத்தில் மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்திருக்கிறது.

அரபிக் கடலின் ஓரத்தில் உள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த மும்பையில் எவ்வளவு மழை பெய்தாலும் சில மணி நேரத்துக்குள் மழை நீர் வடிகிறது. ஆனால், சென்னையில் படகு விட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மனிதன் பாதை மாறினாலும் இயற்கை தன் பாதையை விட்டுத் துளியும் விலகுவதில்லை. அதனாலேயே அன்று ஓடிய பாதையிலேயே இன்றும் நீர் ஓடுகிறது. என்ன ஒரு வேறுபாடு... அன்று ஏரி, குளம், குட்டையென நீரை வாங்கிக்கொண்ட பகுதிகள் இன்று வீடாகி விட்டன. இந்த மழையிலாவது பாடம் கற்று நிரந்தரத் தீர்வு காண நமது ஆட்சியாளர்கள் தொலைநோக்குப் பார்வையோடு அவசரகால நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கு எதிர்க் கட்சிகளும் தங்களின் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x