Published : 28 Nov 2015 10:22 AM
Last Updated : 28 Nov 2015 10:22 AM
புதன் அன்று வெளியான ‘கை கோத்து முடிவெடுங்கள்’ தலையங்கம் இந்தியா நேபாள நாடுகளுக்கு இடையிலான உறவையும் இரு நாடுகளின் அரசியல், பண்பாடு, கலாச்சாரங் களோடு எப்படிப் பின்னிப் பிணைந்தது என்பதையும் விளக்கியது.1950-ல் இந்திய-நேபாள ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்தியா என்ற அரண் நேபாளத்துக்குப் பாதுகாப்பு உணர்வைத் தந்தது. திபெத்தை சீனா கைப்பற்றியதற்குப் பிறகு, நேபாளத்தின் அச்சவுணர்வு சற்று தடுமாற வைத்தது.
அவ்வப்போது ஏற்படும் இயற்கைப் பேரிடர்களின்போது, இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியபோதும், சீனாவை எப்போதும் நேபாளம், சற்று எச்சரிக்கை உணர்வுடன் கையாண்டுவருகிறது.இருப்பினும் குடிமக்களது போராட்டம், நேபாளத்தின் உள்நாட்டுப் பிரச்சினையாகும்.இச்சமயத்தில் இந்தியாவிலிருந்து பொருட்களைக் கொண்டுசென்று சேர்க்க, பாதுகாப்பற்ற இச்சூழ்நிலையில் யார்தான் முன்வருவர்?
தங்களது மக்களின் போராட்டத்துக்குத் தீர்வுகாண்பதே புதிய அரசின் தலையாய கடமை.அதை விடுத்து, இந்தியா போன்ற நட்பு நாடுகளின் மேல் பழி சுமத்தி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப நினைப்பது நேபாளத்துக்கு அழகல்ல. இதுபோன்ற சமயங்களில் இந்தியா அமைதி காப்பது, எதிர்காலத்தில் உண்மையை உணரவைக்க உதவும் என்றே தோன்றுகிறது.
- அ.மயில்சாமி, கண்ணம்பாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT