Published : 25 Nov 2015 10:38 AM
Last Updated : 25 Nov 2015 10:38 AM
கி. ராஜநாராயணன் எழுதிவரும் ‘மனுசங்க’ தொடர் நாம் கவனிக்கத் தவறும் விஷயங்களை நம் பார்வைக்கு வைக்கிறது. தொடரில் செவ்வாய்க்கிழமை கட்டுரையில் வெளியான அந்தக் கால மழை, மனிதர்கள் வர்ணனையை மிகவும் அநாயாசமாகச் சொல்லியுள்ளார். கல்மழை பெய்வது, தகரவீடு, காலையில் கஞ்சி, இரவில் சாப்பாடு போன்றவை இன்று நகரத்தில் உள்ளவர்களுக்குப் புரியாத ஒன்றாகும்.
காற்றின் வேகத்தை நுணுக்கமாக அவர் வர்ணித்திருக்கும் விதம் அருமை. அதேபோல் வெயில் முடிந்து காற்று ஆரம்பம் ஆவதை ‘சித்திரை பத்தினிலே சீராடும் மேல்காத்து’ என்ற சொல்லாடல் மூலம் அழகாகச் சொல்லியுள்ளார். அந்தக் காற்று ஐப்பசி பத்து வரையும் என்பதையும் அதன்பிறகு மழையும் இருக்கும் என்ற பருவநிலை மாற்றத்தையும் மிக அழகாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர், இளைய தலைமுறையின் பார்வையை விசாலமாக்கும் என்பதில் சந்தேகமில்லை!
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT