Published : 16 Nov 2015 01:02 PM
Last Updated : 16 Nov 2015 01:02 PM
தொடர்ச்சியாகத் தமிழகத்தில் பருவ மழை பெய்து, பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி, வெள்ள அபாய எச்சரிக்கை விடும் அளவுக்குச் சூழல் மாறியிருக்கிறது.
இந்த நேரத்தில், ஆறுகளைக் கடைசியாகத் தூர் வாரிய புள்ளிவிவரப் பட்டியலையும், மத்திய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பயன்படுத்தி, நம் ஏரிகளின் நிலையை எவ்வளவு மேம்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும், ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை களின் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பிரசுரிக்க வேண்டும்.
காவிரி நீருக்காகக் காத்திருக்கும் தமிழக அரசாங்கம் இந்தப் பருவ மழையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், கழிவுநீரின் வடிகாலைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சீரமைப்பதில் அக்கறை காட்ட வேண்டும். மழைக் காலங்களில் தமிழ்நாடு கழிவுநீரின் தொட்டியாக மாறிவிடுகிறது. இதனால், பொது சுகாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. டெங்கு போன்ற விஷக் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரம் இது.
- தனசேகரன் மனோகரன், குடியாத்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT