Published : 16 Nov 2015 01:04 PM
Last Updated : 16 Nov 2015 01:04 PM

குறுகிய மனப்பான்மை

தமிழ்நாட்டில், மதுவுக்கு எதிராகப் பாடிய நாட்டுப்புறப் பாடகர் கோவனுக்கு எதிராகவும், குஜராத்தில், படேல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் அல்லது இடஒதுக்கீடு முறையையே ஒழிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிய ஹர்திக் படேலுக்கு எதிராகவும், தேச விரோதச் சட்டத்தைப் பயன்படுத்தியது கொடுமையான விஷயம்.

சுதந்திர நாட்டில், தங்கள் கருத்துகளைச் சொல்ல மக்களுக்கு உரிமை இல்லையா? ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, விடுதலைக்காக இந்தியர்கள் போராடியபோது, இந்தியர்களை ஒடுக்குவதற்காக இயற்றப்பட்டவை.

இச்சட்டங்களை, சுதந்திரம் அடைந்தபின்பும் பிரயோகிப்பது ஆட்சியாளர்களின் குறுகிய மனப்பான்மையைத்தான் இது காண்பிக்கிறது. இத்தகைய மனப்பாங்கு மாறினால்தான் ஜனநாயகம் தழைத்தோங்கும்.

- அ. ஜெயினுலாப்தீன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x