Published : 26 Nov 2015 09:24 AM
Last Updated : 26 Nov 2015 09:24 AM

வாசகரின் கடமை உணர்ந்தேன்!

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்திகளையும் விளம்பரங்களையும் தரும் இதழாக இல்லாமல் மழை வெள்ளம் கடலூர் பகுதி மக்களை சின்னாபின்னப்படுத்தி உள்ள நிலையில் உற்றுழி உதவும் உயிர்காக்கும் தோழனாய் செயல்படுவதைப் பெருமையோடு பார்க்கிறேன். வெறும் பார்வையாளராகத் தமிழக மக்களை நிறுத்திவிடாமல் உதவும் கரங்களாய் ஒன்று சேர்த்தமை இதழின் சமூக நோக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

உற்றார், உடைமைகளை இழந்து நிற்போருக்கு இதழின் செய்தியாளர்களையும் வாசகர்களையும் உதவுபவர்களாய் மாற்றியது மதித்துப் பாராட்டுதலுக்கு உரியது. வெள்ளத்தை விட ஆபத்தானது அலட்சியம் என்னும் நேர்கொண்ட பார்வை சரியான மதிப்பீடும் தலைப்பும் ஆகும். ஏழாம் வகுப்பு சிவாவின் நோட்டு இதயத்தை என்னவோ செய்கிறது. கல்குணம், பூதம்பாடி, வலுதளம்பட்டி மக்களைக் கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். ‘இதையெல்லாம் வாங்கி அனுப்பினவங்க தலைமுறைக்கும் இந்து குழுமத்திற்கும் எங்க புண்ணியம் போய்ச்சேரும்' என்ற வலுதளம்பட்டி மக்களின் குரலோடு இணைந்துகொள்கிறேன்.

- ச. செல்லத்துரை, உடுமலைப்பேட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x