Published : 17 Nov 2015 10:58 AM
Last Updated : 17 Nov 2015 10:58 AM
ஆதி மதுரையில் வெள்ளம்... வந்திக் கிழவிக்குப் பதிலியாய் வந்தவன் கூலிக்கு பிட்டு உண்டுவிட்டுக் கண்ணயர்கிறான். அவசர காலநிலையில் தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது? இக்கட்டான நேரத்தில் தூங்கிய வனைக் கண்ட ஆவேச மன்னனின் பிரம்படி, மனித குலத்தின் நடுமுதுகுக் கோடாயிற்று. இது திருவிளையாடல் புராணம். அவ்வளவுதானா அது சொல்லும் செய்தி? அது எடுத்து இயம்பியது ஆதி குடி மராமத்து வழக்கத்தை!
போர்க்கால அடிப்படையில் கரை உடைப்பைச் சரிசெய்துகொண்டிருக்கும்போது ஆண்டவன், மன்னன், மக்கள் என யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்பதையும்தான். முன் எச்சரிக்கைகள், ஏரிகளின் மேல் நிற்கும் நியாயமார் மன்றங்கள்.. நீர் வரத்தையும் போக்கையும் அடைக்கும் குப்பைகள், அதில் கலக்கும் கழிவுகள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூங்கிக்கொண்டிருப்போரை எந்தப் பிரம்பால் அடிப்பது? தூங்குவது ஆண்டவனோ அல்லது மன்னனேயானாலும்! மடையர்களைப் போற்றுவோம் வாருங்கள்.
- பாண்டி, மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT