Published : 06 Nov 2015 10:47 AM
Last Updated : 06 Nov 2015 10:47 AM

தீய சாதி

நிமிடக் கட்டுரையான ‘சாதிச் சூழலில் காவிரிப் படுகை’ படித்ததும் மனம் கனத்தது. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதிகளை மறந்து வாழ்ந்த மக்களிடையே சா(தி)தீய உணர்வை ஏற்படுத்திய பெருமையெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகளைத்தான் சாரும். சாதிச் சங்கங்கள் பல இருந்தாலும், அவை தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்த்துத் திருமணம் செய்துவைக்கும் அமைப்பாக மட்டுமே இயங்கிவருகின்றன.

ஆனால், நாடாளுமன்ற வேட்பாளர் முதல் உள்ளாட்சி மன்ற வேட்பாளர் வரை நமது சாதி வேட்பாளர் என்று அடையாளம் காட்டி வாக்கு சேகரிக்கும் நிலையில், நமது ஜனநாயகம் தோற்றுக்கொண்டிருக்கிறது. மீண்டும் உருவாகியுள்ள இந்த சாதியப் போரிலிருந்து எப்போது விடுதலை பெறப்போகிறோம் என்பது கேள்விக்குறிதான்.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டம் சாதிய வேறுபாடின்றி, பொதுவுடமை பூமியாகவும், திராவிட இயக்கக் கொள்கைகளின் களமாகவும் விளங்கியது என ‘சாதிச் சூழலில் காவிரிப் படுகை’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது முற்றிலும் உண்மை. ஆனால், இன்று பழங்கால மன்னர்களைக் கூட சாதி அடிப்படையில் சொந்தம் கொண்டாடு கின்றனர். முன்பெல்லாம் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில்தான் சாதி இருந்தது. இப்போது கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை சாதி ஆதிக்கம் செலுத்திவருகிறது என்பது கசப்பான உண்மை. இது தஞ்சை மாவட்டம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலையும் இதுவே. இளைய சமுதாயம் இதனை மாற்ற முன் வர வேண்டும்.

- மு. செல்வராஜ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x