Published : 07 Nov 2015 10:29 AM
Last Updated : 07 Nov 2015 10:29 AM

இந்தியாவைச் சூழ்ந்துள்ள இருள்

'மோடி தோல்விகளின் இமாலய ஆரம்பம்’ கட்டுரை உண்மையை உலகறியச் செய்தது. நேபாளத்தின் கஷ்டத்துக்கு இந்தியாவும் காரணம் என்று படித்தபோது மனம் வெம்பியது. பொருளாதார முன்னேற்றம் விரும்பும் நமக்கு நேபாளத்தின் உள் விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? பாகிஸ்தான் நம் நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் எப்படி விமர்சனம் செய்கிறோம்? நமக்கு ஒரு நியாயம், நேபாளத்துக்கு ஒரு நியாயமா? நேபாளத்தின் மீது திணிக்கப்பட்டது பொருளாதாரப் பூகம்பம் என்று நேபாள மக்கள் கூறுவது உண்மைதான் எனத் தோன்றுகிறது. மோடியின் இத்தகைய அதிகார துஷ்பிரயோகம் அண்டை நாடான நேபாளத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவையும் சூழ்ந்துள்ள இருள் என்றே சொல்ல வேண்டும்.

- வீ. யமுனா ராணி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x