Published : 18 Nov 2015 10:51 AM
Last Updated : 18 Nov 2015 10:51 AM

ஜெயகாந்தனும் பாரிஸும்

சாரு நிவேதிதாவின் ‘பாரீஸுக்கு ஓர் இரங்கல் செய்தி’ கட்டுரை இன்றைய யதார்த்தத்தை கூறும் முக்கிய பதிவு. கலை இலக்கிய உலகில் அனைவரின் கனவு நகரமான பாரிஸின் இன்றைய நிலை, பயங்கரவாதங்களுக்கு என்னதான் பதிலடி என உலகையே சிந்திக்க வைத்திருக்கிறது.

சிரியா, இராக் போன்ற நாடுகளைச் சீரழித்த ஐஎஸ் பயங்கரவாதிகள், இன்று ஐரோப்பாவைக் குறிவைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்லும் அகதிகளுக்கும் இதன் மூலம் சிக்கல் உருவாகியிருக்கிறது. எந்த மதமாக இருந்தாலும் மனிதத்தை அழிப்பது அதன் கோட்பாடாக இருக்காது. பயங்கரவாதிகளுக்கு மதம் ஒரு அடையாளம் மட்டுமே.

சரியான வழிகாட்டிகளும், தலைவர்களும் உலகுக்குத் தேவை. ஜெயகாந்தன் எழுதிய ‘பாரீசுக்குப் போ’ நாவலில் கலைஞர்கள் தனிமனித சுதந்திரத் துடன் நாகரிகமாக, பயமின்றி வாழ ஏற்ற இடமாக பாரீஸைக் குறிப்பிடுவார். இன்று பாரிஸ் நிலை குலைந்திருப்பது அந்நகரை நேசித்த அனைவரையும் வருத்தமுறச் செய்திருக்கிறது. புலம்பெயர்ந்தவர் களோ, நாட்டின் நிரந்தரக் குடிமக்களோ கலைஞர்களோ, வியாபாரிகளோ யாராக இருந்தாலும் மனிதத்தன்மையற்ற செயல்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதே நம் விருப்பம்.

- மோனிகா மாறன், வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x