Published : 03 Nov 2015 11:09 AM
Last Updated : 03 Nov 2015 11:09 AM

கலைஞனை மறக்கலாமா?

தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் தியாகராஜ பாகவதரின் நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த திரையுலக நடிகர்களும், நாடக நடிகர்களும் ஆர்வம் காட்டவில்லை என்று வெளியான செய்தி மிகுந்த வருத்தமளித்தது.

அற்புதமான தனது குரல் வளத்தாலும், உணர்வுபூர்வமான நடிப்பாலும் அந்தக் கால ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பாகவதர். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கிய ‘அம்பிகாபதி’ படத்தில் காதலில் கசிந்துருகும் கவியாக அவரது நடிப்பு அற்புதமாக அமைந்தது. சபையில் அரசர் உட்பட எல்லோரும் அமர்ந்திருக்க, யாரையும் பொருட்படுத்தாமல், மாடத்தில் நின்றுகொண்டிருக்கும் அமராவதியைக் காதலுடன் அவர் பார்க்கும் பார்வை அத்தனை இயல்பாக இருக்கும்.

இந்தக் கால ரசிகர்களும் அப்படத்தை ரசிக்க முடியும். இப்படி அற்புதமான படைப்புகளில் பங்கேற்ற கலைஞனையா புறக்கணிப்பது?!

- எம். ராஜசெல்வம், மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x