Published : 02 Nov 2015 12:13 PM
Last Updated : 02 Nov 2015 12:13 PM

இணையான வாகனம் ஏது?

அழிவின் நுழைவாயிலில் இருக்கும் பல பழமைவாய்ந்த விஷயங்களில் குதிரை வண்டிச் சவாரியும் சேர்ந்துவிட்டதே என்ற ஆதங்கம் ‘ஒரு பொழப்பு பல வயிறு’ கட்டுரையைப் படித்தபோது ஏற்பட்டது.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் குதிரை வண்டியை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சுப்பிரமணியின் சோகத்தை உணர முடிந்தது. என்னதான் அதி வேகப் போக்குவரத்து வாகனங்கள் வந்தாலும், குதிரை குளம்படி ஓசை காதில் விழ, பயணம் செய்த அந்த சுகத்துக்கு ஈடு இணை ஏது?

வேகத்தை அளக்கும் அளவுகோலாக ஹார்ஸ் பவரைச் சொல்வார்கள். ஆனால், சுப்பிரமணிக்கும் அவருடைய குதிரைக்கும் பவர் (சக்தி) எப்படி, எப்போது கிடைக்கும்?

- கு.மா.பா. கபிலன், சென்னை.

ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த குதிரை வண்டிகளின் நிலையையும் வண்டிக்காரரின் வாழ்க்கையையும் தத்ரூபமாகச் சொல்லியது, ‘ஒரு பொழப்பு பல வயிறு’கட்டுரை. குதிரை வண்டிப் பயணம் சில சரித்திரங்களையும் சக மனிதர்களையும் அடையாளம் காட்டும்.

இயந்திர வாகனங்களை ஓட்டுபவர்கள் அவ்வளவாகப் பேச மாட்டார்கள். சுப்பிரமணி தன் வாழ்க்கையைக் கட்டுரையாளரிடம் கொட்டித் தீர்த்துவிட்டார். பல வயிறு நிரம்ப எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதைக் கட்டுரை நமக்குச் சிறப்பாக உணர்த்துகிறது.

- மா. கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x