Published : 13 Nov 2015 09:59 AM
Last Updated : 13 Nov 2015 09:59 AM
மதத்தின் பெயரால் எந்த அநியாயம் நடந்தாலும் அவற்றுக்கு அந்தந்த மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும், மத்திய அரசு நேரடியாகத் தலையிட முடியாது என்று ஒதுங்குவதுபோல் மோடி நடந்து கொண்டார். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்பதுபோல் இருந்தது அவருடைய நடவடிக்கைகள். அந்தச் சம்பவங்கள் பிரதமர் மற்றும் மத்திய அரசால் கண்டிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் என்றும், அந்தந்த மாநில அரசால் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கும்படி செய்யவேண்டும் என்பதும் மக்களுக்குத் தெரியாதா!
அந்தச் சம்பவங்களுக்கு பாஜக மற்றும் சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த ஆட்கள்தான் காரணகர்த்தாக்கள் என்பதும் அவற்றைத் தூண்டிவிட்டதும் ஆதரவு அளித்துப் பேசியதும் அவர்கள்தான் என்பதும் தெரிந்தும் மோடி மவுனமாக இருந்ததும் மக்களுக்குத் தெரியாதா! இப்படிப்பட்ட பிரதமரையா தேர்ந்தெடுத்தோம் என்று தாங்கள் செய்த தவறைத் திருத்திக்கொண்டுதான் பிஹார் மக்கள் பிரதமருக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
ராகம் தாளம், ‘தி இந்து’ இணையதளத்தில்
பேச்சை நம்பவில்லை
பிரதமர் மோடியின் ஆரவாரப் பேச்சை பிஹார் மக்கள் நம்பவில்லை என்பதை நிரூபித்துள்ளது பிஹார் தேர்தல் முடிவு. பிஹார் மக்கள் நிதிஷுக்கு அளித்த வெற்றி பல பாடங்களைச் சொல்கிறது. லாலுவுக்கு ஒரு மறுவாழ்வு. காங்கிரஸுக்கு உயிர் தண்ணீர் கிடைத்திருக்கிறது. மாபெரும் வெற்றி கிடைத்திருக்கும் நிதிஷுக்கு இமாலயக் கடமை காத்திருக்கிறது. எல்லாவற்றையும்விட மோடிக்கு கசப்பு மருந்தைத் தந்துள்ளனர்.மொத்தத்தில் எங்காவது, எப்படியாவது நம் வாழ்வில் ஒரு ஒளிக்கீற்று கிடைக்குமா என்று பின்தங்கிய பி்ஹார் மக்கள் ஏங்கித் தவிப்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது.
எஸ். எஸ். ரவிக்குமார், கிருஷ்ணகிரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT