Published : 21 Nov 2015 01:18 PM
Last Updated : 21 Nov 2015 01:18 PM
நதிநீர் இணைப்புக்காக, நீர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்ற மன்னார்குடி ரங்கநாதன், பேராசிரியர் ஏ.சி.காமராஜ் போன்றோரின் கருத்துகளையும், இவர்களது வாயிலாக பழ.கோமதி நாயகம் எழுதிய அரும்பெரும் கருத்துகளையும், எடுத்துரைத்து நதிநீர் இணைப்பு சாத்தியமே என்பதையும், அது உடனடித் தேவை என்பதையும் மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவந்து, தற்போது பொது இடங்களில் மக்களை இதன் சார்பாகப் பேச வைத்தது நமது நாளிதழுக்கு கிடைத்த வெற்றியாகவே வாசகர்கள் கருதுகிறோம்.
குறிப்பாக, வி.ஐ.டி. போன்ற பல்கலைக்கழகங்கள், மக்களின் அடிப்படைத் தேவையான நதிநீர் இணைப்பு பற்றி கருத்தரங்கம் நடத்துவது மாணவர்களும் நீர்மேலாண்மையை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். நதிநீர் இணைப்பு மூலம் எவ்வளவோ நன்மைகள் இருந்தும், அதற்கான சாத்தியங்களும் சாதகமாக இருந்தும், அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இன்மையால்தான் இந்தத் திட்டம் இன்னும் காகிதத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்துவது நமது நாட்டின் வளர்ச்சியை நாமே தாமதப்படுத்துவதாகவே அமைகிறது.
- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT