Published : 20 Nov 2015 10:47 AM
Last Updated : 20 Nov 2015 10:47 AM
‘கொல்வது மழை அல்ல’ கட்டுரை தமிழகப் பிரச்சினையைப் பேசும்போதே ஓடிஷா புயலை எதிர்கொண்ட விதத்தையும் நேர்த்தியாக விளக்கியது. மக்களுக்குத் தேவை பாதுகாப்பு, இழப்பீடுகள் அல்ல! வடிகால்கள் தேவை, நிவாரணம் அல்ல! ஓடும் வெள்ளத்தில் மக்களின் உயிரையும், உடமைகளையும் வைத்து மத்திய அரசிடம் பணம் வாங்கும் வழியைப் பார்க்கிறார்கள்.
மழை, வெள்ளம், புயல் போன்ற பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிவாரணம் என்பது இரண்டாம் பட்சம்தான். ‘அன்றைய தஞ்சையும், இன்றைய சென்னையும்’ கட்டுரையில் முன்னோர்கள், மன்னர்கள் மழை நீரைச் சேகரிக்கும் வழியை எவ்வளவு அழகாகக் கையாண்டார்கள் என்பது அற்புதமாக எடுத்துரைக் கப்பட்டிருந்தது. தஞ்சையை ஆண்ட செல்லப்ப நாயகரின் நீர் சேமிக்கும் முறையைப் பின்பற்றினாலே சென்னை சோலைவனமாகும்!
- வீ. யமுனா ராணி, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT