Published : 18 Nov 2015 10:49 AM
Last Updated : 18 Nov 2015 10:49 AM

அம்பேத்கரின் அவசியம்

`அம்பேத்கரை மறந்த கல்விப் புலம்’ கட்டுரை பொதுவெளியில் பேசப்படாத முக்கியச் சிக்கலை விவாதத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. உறுதியான ஜனநாயக இந்தியாவைக் கட்டமைக்க உயர் கல்வியில் மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வித் திட்டங்களிலும் அம்பேத்கரின் சிந்தனைகளை அமல்படுத்துவது அவசியம். இதைச் செய்யத் தவறி னால் வருங்காலத் தலைமுறைக்கு ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் பெரும்பான்மைவாத அச்சுறுத்தல் களும் இல்லாத சமத்துவமான ஜனநாயக இந்தியா வை உருவாக் கிக் கொடுக்கத் தவறிவிடுவோம். எல்லா நாடுகளுமே உலகளாவியப் பொருளாதார ஆதிக்கச் சக்திகளின்

கோரப்பிடிக்குள் சிக்குண்டுவரும் நிலையில், ஜனநாயக நெறிமுறை களுக்கான அடிச்சுவடுகளே இல்லா மல் போகின்ற அபாயச் சூழலை இன்று உலக மக்கள் அனைவருமே எதிர்கொண்டுள்ளனர். இந்த அபாய இருளை அம்பேத்கரின் சிந்தனை ஒளி கொண்டு உலக நாடுகளின் அறிஞர்கள் பார்க்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி,

கனடா போன்ற நாடுகளில் உள்ள கல்விப் புலங்கள் அம்பேத்கர் சிந்தனைகளை இன்றைக்கும் போற்றுகின்றன. இந்தியச் சமூக அமைப்பில் காலங்காலமாக கடவுள், மதம் போன்ற நம்பிக்கைகளால் மிக நுட்பமாகவும் உறுதியாகவும் பரப்பப்பட்டுள்ள சாதியப் பாகுபாடு எனும் இருளை அகற்ற அம்பேத்கரின் சிந்தனைகள் பெரும் துணையாக இருக்கும்.

- சு.மூர்த்தி, அமைப்பாளர், மக்களாட்சிக்கான கல்வி இயக்கம், மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x