Published : 19 Nov 2015 10:31 AM
Last Updated : 19 Nov 2015 10:31 AM
ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றுசேர்ந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். மற்ற உலக நாடுகளும் செயலில் இறங்கி அந்த அமைப்பை அடியோடு களைய வேண்டும். இதனால் அமைதியான உலகம் சாத்தியமாகும் என்பதோடு முஸ்லிம் களுக்குச் சம்பந்தமில்லாத ஆனால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத முத்திரையும் அழியும்.
- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.
வ.உ.சி-யும் தமிழ்ப் பணிகளும்!
கப்பலோட்டிய தமிழராக மட்டுமே பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் வ.உ.சி-யின் இன்னொரு முகத்தைக் கட்டுரையாளர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறர். அவர் ஒரு தமிழறிஞர் என்பது இளைய தலைமுறைக்குப் புதிய செய்தி. தமிழையும் சைவத்தையும் தம் இரண்டு கண் களாகப் பாவித்திருப்பதும்கூட அவர் வெளியிட்ட நூல்கள், மொழிபெயர்த்த நூல்களின் வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
- பி. சந்தானகிருஷ்ணன். தஞ்சாவூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT