Published : 23 Oct 2015 10:44 AM
Last Updated : 23 Oct 2015 10:44 AM
வரலாற்று ஆய்வாளர் ஆட்ரே டிரஷ்கேவிடம் எடுக்கப்பட்ட ‘வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங் கசீப்’ என்னும் நேர்காணல், ‘இந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு இடமில்லை’ என்ற பாஜகவின் கருத்தைப் புரட்டிப்போடுகிறது.
அதே வேளையில், முகலாயர்களைப் பற்றிய உண்மைகளை பாஜகவினர் மட்டுமல்லாது மக்களும் புரிந்துகொள்ள உதவியது. முகலாயர்கள் மதத்தைப் பரப்ப வந்த மதவாதிகள் அல்ல. அதேபோல முகலாய மன்னர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் திளைத்தவர்களும் அல்ல, பக்தியை வெறுத்தவர்களும் அல்ல. முஸ்லிம்கள் அவ்வளவே! விவசாய விளைச்சலுக்கான வரி மதிப்பீடு நேர்மையான முறையில் தீர்மானிக்கப்பட்டது.
மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே `குபில்யாத்' என்ற ஒப்பந்தம் போடப்பட்டு விவசாயம் பெருக்கப்பட்டது. இயற்கைச் சீற்றங்களால், பருவ மழை தவறினால் பயிருக்கான நஷ்ட ஈடு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி எத்தனையோ புதிய திட்டங்களை அறிமுகம் செய்தவர்கள் முகலாயர்கள்.
- எ.எம்.நூர்தீன்,சோளிங்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT